மதுரையில், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் போராட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 16 May 2023

மதுரையில், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் போராட்டம்.


பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் பாலியல் குற்றம்சாட்டினர். இந்தப் புகாரை விசாரிக்க குழு அமைக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கடந்த ஏப்.23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இதற்கிடையே பிரிஜ் பூஜன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், டெல்லி போலீசார் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்யாத பிஜேபி அரசை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மதுரை ரயில் நிலையம் முன்பு முற்றுகை இட்டனர். இதில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாநில துணைத் தலைவரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான ராஜலெட்சுமி தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட பொறுப்புச் செயலாளர் நாகஜோதி, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் மாநகர் மாவட்டச் செயலாளர் பழனிமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு முற்றுகை இட்டு கோஷமிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad