சோழவந்தானில் சித்திரை மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 4 May 2023

சோழவந்தானில் சித்திரை மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.


சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு  சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும்  பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார், ஐயப்பன் செய்தனர். பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். 


விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம்வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது பிஜேபி விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம் வி எம் குழும தலைவர் மணிமுத்தையா,நிர்வாகி வள்ளிமயில், எம் வி எம் தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


இதே போல சோழவந்தான் பகுதியை சுற்றியுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது 

No comments:

Post a Comment

Post Top Ad