மதுரை மாவட்ட, திட்டமிடும் குழுவிற்கு ஊரகப் பகுதி (மாவட்ட ஊராட்சி) - 8 உறுப்பினர் பதவியிடங்களும் மற்றும் நகர்ப்புறப்பகுதி (மாநகராட்சி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) -10 உறுப்பினர் பதவியிடங்களும் நிர்ணயம் செய்யப்ட்டு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.80 நாள்.07.03.2023-ல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுரைகளின்படி, நாளது தேதியில் பதவியில் உள்ள மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் வார்டு உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்டு தயார் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் 02.05.2023-ல் வாக்காளர்களின் பொதுவான தகவலுக்காக வாக்காளர் பதிவு அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், வெளியிட்டார்.

உறுப்பினர்கள் எண்ணிக்கை வருமாறு, ஊரகப்பகுதி- மாவட்ட ஊராட்சி: 23. நகரப்பகுதி - மாநகராட்சி : 100, நகராட்சிகள்: 78, பேரூராட்சிகள்: 144, மொத்தம் : 345.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கூடுதல் ஆட்சியர் (வ) செ.சரவணன், தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சீ.ராஜ்மோகன் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலர் சா.லோகன் உட்பட அரசு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment