இதற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அன்னதானத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார் .மற்றும் இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் தனராஜன், வெற்றிவேல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், திருமங்கலம் முசிசோமு முருகன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ், மகாலிங்கம், செல்லம்பட்டி ராஜா, பேரூர் கழகச் செயலாளர் அசோக் குமார், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், செல்லம்பட்டி ரகு, மகேந்திர பாண்டி, மாவட்ட பிரதிநிதி முரளி, ராகுல், மலர்க்கண்ணன், பாலன், தமிழரசன், சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் விழாவாக கழக அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒன்னரை கோடி தொண்டர்களின் எண்ணத்தை நனைவாக்கும் வண்ணம், கழக பொது குழுவில் கழகப் பொதுச் செயலாளராக எடப்பாடியார் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பொதுகுழுவை எதிர்த்து சில எதிரிகள் உச்ச நீதிமன்றம் சென்றனர், அதில் எடப்பாடியார் மாபெரும் வெற்றி பெற்றார். தற்பொழுது தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது மட்டுமல்லாது தேர்தல் ஆணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள நல்ல செய்தி கிடைத்துள்ளது. இதன் மூலம் புரட்சிதலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆன்மா எடப்பாடியாருக்கு ஆசி வழங்கி உள்ளது.

கடந்த நான்கரை ஆண்டு காலம் தமிழகம் பொற்கால ஆட்சியாக இருந்தது. ஆனால் இந்த இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், அம்மா சிமெண்ட் இப்படி பல்வேறு திட்டங்களுக்கு மூடு விழா கண்ட அரசாக உள்ளது, தினந்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என மக்கள் விரோத ஆட்சியாக நடைபெற்று வருகிறது.
கல்யாண மண்டங்களில், விளையாட்டு மைதானங்களில் மது விற்பனை, உழைக்கும் தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலை நேரம் ஒவ்வொரு மசோதாகளை அறிவித்து, மக்கள் எதிர்ப்பு வந்தவுடன் அதனை வாபஸ் பெரும் அரசாக இந்த அரசு உள்ளது. இந்த வாபஸ் அரசை, மக்கள் வாபஸ் வாங்கி வீட்டுக்கு அனுப்பும் நாள் எண்ணப்பட்டு வருகிறது கடந்த சட்டமன்றத்தில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும், போதை பொருள் நடமாட்டம் குறித்து எடப்பாடியார் புள்ளி ஒரு தொடர் பேசினார். ஆனால் அதை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. எடப்பாடியார் பேசியதை வேதவாக்காக எடுத்து நடவடிக்கை எடுத்திருந்தால், இன்றைக்கு கள்ளச்சாராயத்தால் 19 உயிர் பலி ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது வாபஸ் அரசாகுள்ள திமுக அரசு, தினம்தோறும் உயிர்ப்பலி வாங்கும் அரசாக உள்ளது. மக்கள் உயிர்பலி வாங்கிய இந்த அரசை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடப்பாடியார் உரிமை குரல் எழுப்பி உள்ளார் இதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்ன பேசினார்.
No comments:
Post a Comment