மதுரை மேலமடை தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்கி விநாயகர் ஆலயத்தில், வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, திருக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், சண்டி ஹோமம் , லட்சுமி ஹோமம் ,நவகிரக ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வராயிக்கு, மஞ்சள் பொடி, பால், அபிஷேக பொடி, பன்னீர், இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது, இதை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாத வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழுவினர் செய்திருந்தனர். திருக்கோவிலிலே, மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமிகளில் காலை 9 மணி அளவில் வராகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இதைதவிர ,வாரந்தோர் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ராகு வேலையில் வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

No comments:
Post a Comment