குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சேர்க்கைக்கு 9132 விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 23 May 2023

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சேர்க்கைக்கு 9132 விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.


பள்ளிக்கல்வித்துறை மதுரை மாவட்டம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு12 (1)(c) இன் படி.  அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை LKG வகுப்பில் குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீட்டு சேர்க்கைக்கான  குழுக்கல் 23.5.23 இன்று மதுரை மாவட்டத்தில் மதிப்பிற்குரிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  கார்த்திகா அவர்களின்  ஆலோசனைப்படி பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர்  பா கோகிலா அவர்களின் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள மொத்தம்  399 தனியார்  பள்ளிகளில் 399 கல்வி துறையைச் சார்ந்த ஆய்வு அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்று சரியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் 9132 விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.  


தகுதியற்ற விண்ணப்பங்கள் என்ற முறையில் மொத்தம்142 விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 399 பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய  4035 இடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இலவச கட்டாய 25 சதவீத மாணவர்கள் சேர்க்கை செயற்கைக்கான குழுக்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனைப்படி தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் .பா. கோகிலா... முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கந்தசாமி.. மாவட்ட திட்ட அலுவலர் சரவணமுருகன்.. முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்  செந்தில்குமார் முருகன் தனியார் பள்ளிகளில் அலுவலக கண்காணிப்பாளர் அண்ணாமலை உதவியாளர்கள் கனகலிங்கம் ராஜேஷ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ஆர்த்தி மாவட்ட தகவல் அலுவலர் செந்தில்வேல் குமரன் இடம் பெற்றிருந்தனர். 


தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பா. கோகிலா மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நர்சரி பள்ளியில் நடைபெற்ற குலு க்களில் கலந்து கொண்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad