லலிதா சகஸ்ரநாம பாராயணம் நாளை நடக்கிறது. மதுரையில் இருந்து சுமார் 300 பேரும் இந்த பாராயணத்தை ஒன்று சேர சொல்கிறார்கள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 22 May 2023

லலிதா சகஸ்ரநாம பாராயணம் நாளை நடக்கிறது. மதுரையில் இருந்து சுமார் 300 பேரும் இந்த பாராயணத்தை ஒன்று சேர சொல்கிறார்கள்.


மதுரை  கற்பகவல்லி நவ கோடி லலிதா சகஸ்ரநாம பாராயண குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வர சுவாமியின் ஆசீர்வாதத்தால் கற்பகவல்லி நவ கோடி லலிதா சகஸ்ரநாம பாராயண குழு மதுரையில் இன்று (22-ந் தேதி) மற்றும் நாளை (23-ந் தேதி)களில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை லோக சேமத்திற்காகவும், நம்மை சுற்றியுள்ள துர் சக்திகள் நீங்கி நல்ல வளத்தோடு அனைவரும் வாழ வேண்டியும், சென்னை கற்பகவல்லி நவகோடி லலிதா சகஸ்ரநாம பாராயண குழுவால் பாராயணம் நடத்தப்படுகிறது. 

சென்னையில் இருந்து கற்பகாம்பாளுடன் 70 பேரும், மதுரையில் இருந்து சுமார் 300 பேரும் இந்த பாராயணத்தை ஒன்று சேர சொல்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment

Post Top Ad