அவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக தப்பிச்சென்றுவிட்டனர். கொலை செய்தனர் பின்னர் அந்தக்கும்பல் அங்கிருந்த டீக்கடை மற்றும் கடைகளை சூறையாடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இந்த தகவல் அறிந்த பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் மதிச்சியம் போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர். போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்று விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் மதுரை ஜெய்ஹிந்து புரம் சோலையழகுபுரம் எம் கே புரத்தைச் சேர்ந்த வாலிபர் சூர்யா 24 என்று தெரியவந்தது. அவரை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டத்தில் நடந்த கொலை சம்பவத்தை பார்த்த பக்தர்கள் தலை தெறிக்க ஓடினர்.இதனால்திருவிழா கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.
வைகை ஆற்றில் திருவிழா கூட்டத்தில் மற்றொரு வாலிபர் ஒருவர் இறந்துகிடந்தார்.இந்த தகவல் விளக்குத்தூண் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எப்படி இருந்தார் கூட்ட நெரிசலில் இறந்தாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment