மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், எம்.எல்.ஏ.க்கள் கோ தளபதி, புதூர் பூமிநாதன், வெங்கடேசன், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாநகர காவல் துணை ஆணையர்கள் சாய் பிரனீத், அரவிந்த், மங்களேஸ்வரன், ஆறுமுகசாமி, மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம், அழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். சித்திரைத் திருவிழாவில், முன்னேறுபாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

No comments:
Post a Comment