மதுரை அருகே நீரில் மூழ்கி மாணவர் சாவு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 28 April 2023

மதுரை அருகே நீரில் மூழ்கி மாணவர் சாவு.


மதுரை, அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம் கிராமத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் உயிரிழப்பு தாமதமாக வந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், பரவை ஊர்மச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன், அனீஸ் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார், பள்ளி விடுமுறை விட்டதை தொடர்ந்து, சமயநல்லூர் அருகே வைரவநத்தம் கிராமத்தில் உள்ள கிணற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். காலை பத்து முப்பது மணி அளவில் குளிக்க சென்ற அவர் எதிர்பாரா விதமாக நீரில் மூழ்கிய உயிரிழந்தார்.


தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கிணற்றில் இறங்கி தேடியும் மாணவன் உடலை மீட்க முடியாததால், அலங்காநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து 3 மணி நேரமாக தேடி அனிஸ் உடலை மீட்டனர் 

இதனைத் தொடர்ந்து, மாணவன் நீருக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு  தெரிவிக்கப்பட்டு, அவர் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்ததால், அங்குள்ள பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை திசை திருப்பும் வகையில், அவர் தீயணைப்புத் துறையினர் காவல்துறையினர் பொதுமக்களை கடிந்து கொண்டார். இதனால், பொதுமக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாம்.


தனது மகனை பறிகொடுத்த ஆனந்தன் குடும்பத்தினர், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ஏற்கனவே, தங்கள் ஆசை  மகன் இறந்த துக்க நிலையில் இருக்கும்போது, சட்டமன்ற உறுப்பினரின் தகாத வார்த்தைகள் அவர்களை மேலும் வெறுப்படைய வைத்தாம்.

No comments:

Post a Comment

Post Top Ad