
பஸ் நிலையத்தில் இறங்கி தான் கொண்டு வந்த பையை பார்த்தபோது அதில் இருந்த மணிபர்ஸ் மாயமாகி இருந்தது. அந்த மணிபர்சில் ரூ.4 ஆயிரமும் இருந்தது. யாரோ மர்ம நபர் பஸ்சில் அவரது மணிபர்சை திருடி உள்ளார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் சுமதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமங்கலம் என்.ஜி.ஓ. பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராமச்சந்திரமூர்த்தி (வயது 22). இவர் புதிதாக வாங்கி இருந்த மோட்டார் சைக்கிளை இரவில் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் ேதடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:
Post a Comment