மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு ஒன்றியம் தெற்கு ஒன்றியம் மேற்கு ஒன்றியம் ஆகிய ஒன்றிய செயலாளர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஆன சாத்தங்குடி கூட கோவில் ஆலம்பட்டி கள்ளிக்குடி ஆகிய கிராமங்களில் உள்ள ஒன்றிய செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர கலந்து கொண்டனர். மேலும் திருமங்கலத்தை அடுத்துள்ள கீழ கோட்டை கிராமத்தில் தேமுதிகவில் இருந்து திமுகவில் 200க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் இளைஞர்கள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி தலைமையில் மு மணிமாறன் அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் திமுகவில்
இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவிக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன், நகரச் செயலாளர் ஸ்ரீதர்,தெற்கு, மேற்கு, கிழக்கு,ஒன்றிய செயலாளர் கீர்த்திகா தங்கா பாண்டியன் ஆலம்பட்டி சண்முகம் மதன்குமார், கப்பலூர் சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், அவைத் தலைவர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment