சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி, ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் யாக பூஜை - ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 21 April 2023

சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி, ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் யாக பூஜை - ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில் உள்ள 108 திருக்கோயில் அமைந்துள்ள முக்தி நிலையத்தில், சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி, பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் யாகபூஜை நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஈடாகவும்,  ஜென்ம பாவங்கள் விலகவும், பித்ரு தோஷம் நீங்கவும் இந்த மிளகாய் யாக பூஜை நடைபெற்றது. முன்னதாக, யாகத்தில் வளர்க்கப்பட்ட ஹோமத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, நெருப்புக் குண்டத்தில் பக்தர்கள் தங்கள் வேண்டிய காரியங்கள் நிறைவேறவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஈடாகவும் மிளகாய் மற்றும் பூசணி விதை உள்ளிட்டவற்றை நெருப்பு குண்டத்தில் இட்டு வழிபட்டனர்.

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், மேலமடை சௌபாக்ய விநாயகர் ஆலயத்திலும் அமாவாசையையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகமும், வடைமாலை அணிவித்து அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad