மதுரை வைகை ஆற்றில் மே. 5 -ம் தேதி தங்க குதிரைவாகத்தில் கள்ளழகர் என்ற சுந்தர் ராஜ பெருமாள் இறங்குகிறார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டாக சுற்று வட்டார கிராம மக்கள்கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக இப்பகுதியில் உள்ள பக்தர்கள் தாங்கள் வேண்டுதலின்படி, அனுமார் வேஷம் தீப்பந்தம் அருவா கம்பு ஆகியவையுடன் வேடமடைந்து கிராம பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு ஆசி வழங்கி வருவது வழக்கம்.

அதேபோன்று, இந்த ஆண்டு நடைபெறும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு, வலசை கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் வேடமணிந்து மேலதாளங்கள் முழங்க, ஊர்வலமாக சென்று ஆசி வழங்கி வருகின்றனர். இதில், அலங்காநல்லூர் பேரூராட்சி துணைத் சேர்மன் சாமிநாதன் வேடமணிந்து, வீதி வீதியாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
No comments:
Post a Comment