தாய்மொழி தமிழ் மொழி, அதுபோல் வாய்ப்புகள் அதிக அளவில் கிடைப்பதற்கு பிற மொழிகளை கற்றுக் கொள்வது தவறு இல்லை, அதுபோல், தொடர்ந்து புத்தகங்களை படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என, கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,17வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில், 600 மாணவ மாணவிகளுக்கு பட்டய படிப்பு பட்டயம் வழங்கப்பட்டது. இதனை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார். உடன், பேராசியர் சீனிவாசன், கல்லூரி உரிமையாளர் ஷா, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டனர்.
பி 20 மாநாடு கலந்து கொண்டு, இங்கிருந்து கலந்துரையாடல் செய்ததாகவும் செய்தியாளர்களுக்கு தெரிவித்த அதன் பிறகு மாணவ மாணவிகளுக்கு புத்தக படிப்பினையும் படிப்பதினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

No comments:
Post a Comment