மதுரை மாவட்டம் “தீ” தொண்டு வாரம் பாதுகாப்பு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 21 April 2023

மதுரை மாவட்டம் “தீ” தொண்டு வாரம் பாதுகாப்பு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தொடங்கி வைத்தார்.


மதுரை மாவட்டம் “தீ” தொண்டு வாரம் பாதுகாப்பு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் மூலம் “தீ” தொண்டு வாரம் பாதுகாப்பு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைக்கிள் பேரணியை, மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 2023 ஏப்ரல் 14-ஆம் தேதி "தீத்தொண்டு நாள்" (நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியின் போது பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை காப்பாற்ற வீரமரணமடைந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 


இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல்  14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு இந்திய அரசின் வழிகாட்டுதல்படி தீத்தொண்டு நாள் தினத்தின் கருப்பொருள் "தீப்பாதுகாப்புக் குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்" என்ற தலைப்பின் கீழ் அனுசரிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களிலும் வரையிலான ஒரு வாரம் தீத்தொண்டு வாரமாக அனுசரிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரகாலமாக தீப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் கூடுமிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.


இதன் ஒரு பகுதியாக, தீ பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து, சைக்கிள் பேரணி தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் தொடங்கி, திருமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் வரை சுமார் 35 கி.மீ நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு குறித்து விளக்கும் வகையில் அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வு போஸ்டர்கள் இடம் பெற்றன.

 

இப்பேரணியில், பங்கேற்றவர்களுக்கு  திருமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இப்பேரணியின் போது, மதுரை தென்மண்டல துணை இயக்குநர் ந.விஜயகுமார், மதுரை மாவட்ட அலுவலர் செ.வினோத் , சுமார் 100 தீயணைப்பு வீரர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad