திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் உலக பூமி தினம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 23 April 2023

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் உலக பூமி தினம்.


திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில்  22-04-2023 சனிக்கிழமை அன்று உலக பூமி தினத்தை முன்னிட்டு மரகன்றுகள் நடும் நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் எக்கோ கிளப் மூலமாகவும், சோழவந்தான் பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்காவில் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பாகவும் மரகன்றுகள் நடப்பட்டன. 

இந்த நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன், செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தெர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். எக்கோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் முனைவர் சந்திரசேகரன், முனைவர் அருள்மாறன், முனைவர் சௌந்தராஜு மற்றும் நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ரமேஷ்குமார், முனைவர் அசோக்குமார், திரு. ரகு, திரு. தினகரன் முனைவர் ராஜ்குமார் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் முனைவர் காமாட்சி, முனைவர் கணேசன், முனைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தன்னார்வ தொண்டு மாணவர்களை ஒருங்கிணைத்து மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர். 


விலங்கியல் துறை சார்பாக சோழவந்தான் பேரூராட்சி மன்றத்தின் வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன இந்த நிகழ்வில் சோழவந்தான் சுகாதார ஆய்வாளர் திரு. முருகானந்தம், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர்கள் திரு. முத்துப்பாண்டி, முனைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விலங்கியல் துறை மாணவர்கள் பங்கு பெற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad