
கடந்த 10 ஆண்டு காலமாக புதைக்குழி தோண்டி திருவிழா நடத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் பக்தர்கள் சாலையில் படுத்து அதனை தாண்டி சாமி வருவது வழக்கம் இந்நிலையில் இந்த ஆண்டு கப்பலூரில் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் பங்குனி திருவிழா நேற்று அம்மன் கண் திறப்புடன் தொடங்கியது இரண்டாம் நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும் கண் திறக்கப்பட்ட முத்தாலம்மன் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சாலையில் நேர்த்திக்கடனாக படுத்திருந்தனர் ஒருவர் ஒருவராக முத்தாலம்மன் தாண்டி அவர்களுக்கு அருள் பாலித்தார் தொடர்ந்து முக்கிய வீதி வழியாக அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கப்பலூர் வெளிப்பகுதியில் சாமியை உடைத்து முளைப்பாரி கரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் நாளை ஆயிரக்கணக்கான பால் குடத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர் தொடர்ந்து தீர்த்தவாரி திருவிழாவுடன் இத்திருவிழா நடைபெறுகிறது இதில் கப்பலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
No comments:
Post a Comment