மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் திறந்த நிலையிலே உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். பாதாள சாக்கடை மூடி திறந்திருப்பதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அதில் விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு படத்தில் நடிகர் விவேக் கூறியது, போல் 200 ரூபாய் மூடியை பொருத்தி இருந்தால் ஒரு உயிரும் போய் இருக்காது, இழப்பீடாக பல லட்சமும் தர வேண்டி இருக்காது என அன்றே சொல்லி இருந்தார். அது போன்ற நிலை மதுரை மாநகராட்சி 70வது வார்டில் நடக்காத அளவிற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா உயிர் பலி ஆன பிறகு நடவடிக்கை எடுப்பார்களா என குற்றச்சாட்டை முன்வைக்கும் பொதுமக்கள் துரித நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகளை உடனடியாக சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்பதை அனைவரும் கூடிய எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment