கடந்த சில மாதங்களாக இங்கு கழிவுநீரை சரியாக சுத்திகரிப்பு செய்யாமல் வாய்க்காலில் இருந்து வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையை யொட்டி வாய்க்காலில் அதிகளவு சுத்திகரிக்கப் பட்ட கழிவுநீர் வெளி யேற்றப் பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் அயன்பாப்பாக்குடி கண்மாயில் வெண் நுரை ததும்ப கலக்கிறது. இதனால் கண்மாயில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கலப்பதால் அயன்பாப்பாக்குடி கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- வெள்ளக்கல்லில் உள்ள மாநகராட்சிக்கு சொந்த மான சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து 50 சதவீதத்திற்கும் மேலான கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் அயன்பாப் பாக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 130 ஏக்கர் கொண்ட திறந்த வெளி நிலப்பரப்பு மற்றும் தோட்டங்களை ஆக்கிர மிக்கிறது. இதனால் அந்த பகுதியில் விவசாயம் கேள்வி குறியாகி உள்ளது.
மேலும் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு தோல் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அயன்பாப்பாக்குடி மற்றும் விவசாய நிலங்களில் கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment