தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களா மணிமாறன் கலந்து கொண்டார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 9 April 2023

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களா மணிமாறன் கலந்து கொண்டார்.


முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா, தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது தொடர்பான கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்குமாவட்ட தி.மு.க செயலாளர் மணிமாறன், வர்த்தகர் அணி செயலாளர் ராமர் கலந்து கொண்டனர். 

மாவட்ட செயலாளர் பேசுகையில், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் ஒன்றியம் மற்றும் ஒன்றிய செயலாளருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரிசளிக்கப்படும்.  விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. கடந்த விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் தான் கூடுதலாக 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுதந்தோம். வருகிற எம்.பி. தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு திருமங்கலம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுதரவேண்டும் என்றார். 


தெற்குமாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், சிவமுருகன், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, துணை செயலாளர்கள் அழகா்சாமி, பால்பாண்டி, ராஜசுலோசனா, பொருளாளர் தேசிங்குராஜன், மாவட்ட பிரதிநிதிகள் ராதாகிருஷ்ணன் ஹரிகரன், பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad