சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 பேரில் 4 பேர் மதுரை வந்தடந்தனர் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 26 April 2023

சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 பேரில் 4 பேர் மதுரை வந்தடந்தனர்


சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு "ஆப்ரேஷன் காவேரி" மூலம் முதல்கட்டமாக 360இந்தியர்கள் மீட்கப்பட்டனர், இதில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருகின்றனர். அவர்களில் 4 பேர் மதுரை வந்தடைந்தனர்.

சூடான் நாட்டில் பணிபுரிந்த ஜோன்ஸ் திரவியம்: மற்றும் சேத்ருத்ஜெபா, ஜென்னி ஜோன்ஸ், ஜோஸ்னா ஜோன்ஸ் ஆகிய 4 பேர் மதுரை வந்தடைந்தனர். சூடான் நாட்டில் ஏற்ட்ட உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிய சிக்கலான சூழலில் அங்கிருந்து இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் பொருட்டு வெளியுறவு துறை மூலம் அமைக்கம் மூலம். 'ஆபரேஷன் காவேரி' எனும் பெயரில், இந்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


முதற்கட்டமாக வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் 360 இந்தியர்கள் மீட்டுப்பட்டு ஜெட்டாவில் இருந்து புதுடெல்லிக்கு விமான மூலம் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இதில் ஒன்பது தமிழர்கள் புதுடெல்லியில் இருந்து சென்னை மற்றும் மதுரை க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இதில் மதுரைக்கு வந்த நான்கு தமிழர்கள் தமிழக அரசு சார்பில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சூடான நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசிற்கு நேற்று கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளதை, தொடர்ந்து சூடான நாட்டில் சிக்கி உள்ள தமிழர்களின் குடும்பத்தார் தமிழக அரசை தொடர்பு கொண்டு  உதவி கோரவும் தகவல் பரிமாற தமிழக அரசு சார்பில் புதிய கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு உள்ளது.


இது குறித்து ஜோன்ஸ் திரவியம் கூறியதாவது, இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் நடைபெறும் உள்நாட்டு போரில் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இங்கு இந்தியர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டு  வசிக்கின்றனர். காட்டுன்பகுதியில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கிறோம். உள் நாட்டு போர் தாக்குதலினால் இங்கு 10 நாட்களாக மின்சாரம் குடிநீர் கிடையாது பெரும்பாலன இடங்களை துணை ராணுவம் கைப்பற்றியுள்ளது.


சூடான் உள்நாட்டு போர் குறித்து பத்திரிக்கை மற்றும் செய்திகள் வந்ததை தொடர்ந்து தமிழக அரசு உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுத்தது. இந்திய தூதரகம் ஏற்பாட்டின்படி ஆபரேசன் காவேரி மூலம் முதல் கட்டமாக 300 பேர்  மீட்கப்பட்டனர். ஆங்கே இன்னும் 3 ஆயிரத்துக்கும் அதிகமாக இந்தியர்கள் உள்ளனர். அவர்களை வாட்ஸ்அப் குழு மூலம் தொடர்பு கொண்டு மீட்புப்ளிகள் செய்து வருகிறோம். தமிழர்களும் நிறைய உள்ளனர்.


துணை இராணுவம் முக்கிய பகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. 'முக்கிய உடமைகளை தவிர மற்றப் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதியில்லை காட்டூனிலிருந்து ஜெட்டா வரை பேருந்துல்சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தோம், நான் ஒரு பள்ளி இயக்குனராக பணிபுரிகிறேன் எனது மூத்தமகள் ஜென்ஸி ஜோன்ஸ் மருத்துவம் 3ம் ஆண்டும் 2வது மகள் ஜோஸ்னா ஜோன்ஸ் 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.


தற்போது எங்களது வாழ்கை  கேள்விகுறியாக உள்ளது. அங்குள்ள கல்விமுறை வேறு. இங்குள்ள கல்வி முறை வேறு எங்கள் பிள்ளைகள் படிப்பை தொடர முதல்வர் உதவி செய்ய வேண்டும் அங்குள்ளவர்களை மீட்க சூடானிய மக்கள் மூலமாக தகவல் மூலம் பேருந்து ஏற்பாடு செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுள்ளது என ஜோன்ஸ் திரவியம் கூறினார்


சீத்ருஷீபா. பேட்டி கூறியதாவது. ஆட்சி செய்வதில் ஏற்பட்ட மோதலில் இராணுவம் - துணை இராணுவம் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதற்கு பின்னால் பல நாடுகள் உள்ளன. 2 நாளில் போர் முடியும் என நினைத்தோம் அத்தியாவாசிய பொருட்கள் இல்லாததால் மிகவும் கடினம் எந்த  பொருளும் எடுத்து வரலை. 7 இடங்களில் சோதனை நடைபெற்றது. மீட்பு பணியில் யு.என் தலையிட்டதால் 12 மணிநேரம் காத்திருந்து வரும் நிலை முதல் பெண் மருத்தும் 3ம் வருடம் 2ம் பெண் முதல்வருட மருத்துவம் படித்தனர். இங்கு அதேபோல் படிப்பை தொடர தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என ஹீத்ரு சிபா கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad