24ம் தேதி முதல் 26ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 25 April 2023

24ம் தேதி முதல் 26ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி.


மதுரை மாவட்டம். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலன் கருதி சிறப்பான பல திட்டங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அனைவரும் அறிந்தது. அவற்றில் மிகச்  சிறப்புமிக்க 2027 ஆம் ஆண்டுக்குள் தொடக்கநிலையில்  அனைத்து மாணவர்களுக்கும் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்ற திட்டம் என்னும் எழுத்தும் திட்டம் ஆகும்.

இதன் தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் அரசுபள்ளிகளை கொண்டாடுவோம் எனும் விழிப்புணர்வு வாகன பிரச்சார பேரணியை சென்ற வாரம் மதுரை மாவட்ட  ஆட்சியர் மரு. எஸ் அணிஷ் சேகர், ஏ.ஆர் லைன் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் துவக்கி வைத்தார். என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவத்திற்கு ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 24.4.23 முதல் 26.4.23 மூன்று நாட்கள்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  கா. கார்த்திகா ஆலோசனையின் படியும் நேரடி கண்காணிப்பில்  அனைத்து 15 ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வள மையங்கள் மற்றும் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிற்சி நடைபெறுகிறது. 

இப்ப பயிற்சியை 24.4.23 அன்று மதுரை வடக்கு ஒன்றியத்தில் உள்ள  seventhday Adventist matriculation பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில்  மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பாடத்திட்ட இணை இயக்குனர்  ஸ்ரீதேவி அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவங்களை விவரித்தும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் எளிமையாக விவரித்துக் கூற ஆசிரியர்கள் அனைவருக்கும்  என்னும் எழுத்தும் கற்பித்தலில் எளிமையை விளக்கினார்.


மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஜான் போஸ்கோ துவக்க பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  கா. கார்த்திகா அவர்கள் பயிற்சி யை துவக்கி வைத்து எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் இந்த ஆண்டுக்கான செயல் திட்டங்களை விவரித்துக்  கூறி ஆசிரியர்களை சிறப்பாக பணி செய்ய வாழ்த்தினார். இப் பயிற்சியில் மாவட்ட முழுமைக்கும் சுமார் 2700 மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கு கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad