நான் முதல்வன் கல்லூரி கனவு 2023. திட்ட ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 22 April 2023

நான் முதல்வன் கல்லூரி கனவு 2023. திட்ட ஆலோசனை கூட்டம்.


பள்ளிக் கல்வித்துறை மதுரை மாவட்டம். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உன்னத திட்டங்களில் ஒன்றான நான் முதல்வன் கல்லூரி கனவு 2023. திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில்  வருகிற மே மாதம் 6 ஆம் தேதிமுதல் (பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுக்குப் பிறகு) அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் அந்தந்த பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் கல்லூரியில் சேர்க்கும் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வு நடைபெற இருப்பதால் அது சார்ந்து மதுரை  மாவட்ட பள்ளி கல்வித் துறையில் இன் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு ஆலோசனைக் கூட்டம்  மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ். அனிஷ்சேகர்  தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .கா. கார்த்திகா அவர்கள் முன்னிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அரங்கில்  21.4.23 மாலை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் மதுரை மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலரின் நேரடி உதவியாளர்கள் ஆசிரியர் பயிற்சி கல்லூரி நிறுவன விரிவுரையாளர்கள் கல்லூரி நாட்டு நல பணித் திட்ட அலுவலர் மாநில அளவில் பயிற்சி பெற்ற உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வின் குழுவினர்கள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் பயிற்றுனர் கள் கலந்து கொண்டனர். 


கல்லூரி கனவு நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த அனைவரையும் உயர்கல்வியில் கல்லூரியில் சேர்ப்பது. என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பள்ளிக்கு தொடர்ந்து வருகை தராத பள்ளியில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து தமது கல்வியை தொடர தகுந்த வாய்ப்பை உருவாக்கி தருகின்ற வகையிலும் இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. 


அதன்படி உயர்கல்வி வழிகாட்டல் குழுவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர் முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உப தலைவர் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் உண்மை குழு கல்வியாளர் ஒரு நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் (NSS students) ஆகியோர் இணைந்த குழுக்கள் இவ்வழிகாட்டு குழுக்களில் இடம்பெற்று இருப்பர். இவர்களுக்கான பயிற்சி வழங்குவதற்கு மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்களாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலுவலர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பயிற்றுனர் இவர்கள் கொண்ட குழு மாவட்ட அளவிலான பயிற்சி வருகிற 24.4.23 அன்று மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வருகிற மே 6 முதல் மதுரை மாவட்டத்தில் உள்ள சுமார் 109 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய சுமார் 11,600 மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்வி சார்ந்த வழிகாட்டவும்.. பயிற்சி அளிக்கவும் சுமார் 1700 தன்னார்வலர்கள்  உள்ளார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad