ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மதுரை மாவட்டம். இன்று (18/4/2023) மதுரை மாவட்ட திட்ட அலுவலக பயிற்சி அரங்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் 2023-24 கல்வியாண்டிற்கான முதல் பருவத்திற்க்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு முன் திட்டமிடல் பணிமனை நடைபெற்றது. பணிமனையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி துணை முதல்வர் முனைவர் இராமராஜ் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்மேகம் சரவணன் முருகன் ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர்கள் என்னும் எழுத்தும் பயிற்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இப்ப பயிற்சி ஆனது தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 24/4/23 முதல் 26/4/23 வரை மூன்று நாட்களுக்கு அந்தந்த ஒன்றியங்களில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment