பிளஸ்-2 மாணவி- தற்கொலையா? ஆணவபடு கொலையா? போலீசார் தீவிர விசாரணை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 18 April 2023

பிளஸ்-2 மாணவி- தற்கொலையா? ஆணவபடு கொலையா? போலீசார் தீவிர விசாரணை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கருப்பாயி. இவர்களது இளைய மகள் அன்னலட்சுமி. பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தார். தேர்வு சரியாக எழுதவில்லை என வீட்டில் இருந்தவர்களிடம் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 



இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த டி.கல்லுப்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad