13 ஆண்டுகளுக்கு முன்பு இரு சமுதாயத்திற்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒரு சமுதாயத்தினர் கோவிலை பூட்டு போட்டு பூட்டி உள்ளனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 7 April 2023

13 ஆண்டுகளுக்கு முன்பு இரு சமுதாயத்திற்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒரு சமுதாயத்தினர் கோவிலை பூட்டு போட்டு பூட்டி உள்ளனர்.


மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி தாலுகால நேசநேரி பகுதியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி வால குருநாதன் கோவில் 13 ஆண்டுகளுக்கு முன்பு இரு சமுதாயத்திற்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒரு சமுதாயத்தினர் கோவிலை பூட்டு போட்டு பூட்டி உள்ளனர்.

இதனை தொடர்ந்து திருமங்கலம் சுற்று வட்டார கரிசகாலாம்பட்டி, ராயபாளையம், காமாட்சிபுரம் உள்ளிட்ட 48 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில்  13 ஆண்டுகளாக கோவில் வெளியவே நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வந்தது.



எனவே இது குறித்து ஒரு சமூகத்தினர் கோவிலை திறக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய நிலையில் நீதிமன்றம் கோவிலை திறக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை டிஎஸ்பி வசந்தகுமார் தலைமையிலான நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் மற்றும் இந்து அறநிலை துறை மண்டல இணை ஆணையாளர் செல்வி, கள்ளிக்குடி வட்டாட்சியர் சுரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் அறநிலை துறை ஊழியர்கள் கோவில் பூட்டை உடைத்து அங்காள ஈஸ்வரி வால குருநாதன் கோவில் திறந்தனர்.


திருமங்கலம் அருகே மேல் நேசநேரி பகுதியில் இரு சமூகத்தினர் பிரச்சனை காரணமாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் பாதுகாப்புடன் கோவிலின் பூட்டை உடைத்து பூஜைகள் செய்யப்பட்டு, தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad