மதுரை திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டத்துக்கு விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது மேலும் விசாரணை மேற்கொண்டதில் மதுரை பாக்கியநாதபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த முருகன் மகன் சதீஷ்குமார் என்பதும். சட்டத்துக்கு புறம்பாக 1155 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. எனவே சதீஷ்குமாரை கைது குடிமைப் பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

No comments:
Post a Comment