பாறைப்பட்டி கன்னிமார் கோயிலில் பூஜை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 21 March 2023

பாறைப்பட்டி கன்னிமார் கோயிலில் பூஜை.


மதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே  பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில்,  பங்குனி  மாத சர்வஅமாவாசை பூஜைகள்,  உலக நன்மை வேண்டியும், மக்கள்  நலமுடன் வாழவும்  கூட்டு பிரார்த்தனைகள் நடந்தது. 

இதையொட்டி, 7 கன்னிமார் அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள், சம்மங்கி, ரோஜா, மல்லிகை, அரளி, முல்லை, மஞ்சள் செவ்வந்தி, நாணல் புல், உள்ளிட்ட வண்ண பூமாலைகள், பட்டாடைகள், அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தது. தீபாராதனைகளும், நடந்தது. சுற்றுவட்டாரங்கள், வெளி மாவட்டங்ளில் இருந்து ஏராளமான பக்தர்கள், குலதெய்வ வழிபாடு உள்ளவர்கள், வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள், குழந்தை வரம், திருமண வரம், நிறைவேறியவர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.


தொடர்ந்து, அங்குள்ள மண்டப வளாகத்தில் அறுசுவை உணவு, அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோவிலிலும் பூஜைகள் நடந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாறைபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad