மதுரையில் முத்தூட் பைனான்ஸ் ஐ.எம்.ஏ. இணைந்து மருத்துவர்களுக்கு கோல்டன் விருதுகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 20 March 2023

மதுரையில் முத்தூட் பைனான்ஸ் ஐ.எம்.ஏ. இணைந்து மருத்துவர்களுக்கு கோல்டன் விருதுகள் வழங்கப்பட்டது.


மதுரையில் முத்தூட் பைனான்ஸ் ஐ.எம்.ஏ. இணைந்து மருத்துவர்களுக்கு கோல்டன் விருதுகள் வழங்கப்பட்டது. மதுரையில், முத்தூட் ஃபைனான்ஸ், இந்திய மருத்துவ சங்கம், மதுரை கிளையுடன் (ஐ.எம்.ஏ) இணைந்து 50 மருத்துவர்களுக்கு 2023 ஆண்டுக்கான மருத்துவ சிறப்பு முத்தூட் கோல்டன் விருதுகளை, தலைமை விருந்தினராக பங்கேற்ற மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், வடமலையான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் புகழகிரி ஆகியோர் வழங்கினார்.

 

இவ்விழாவிற்கு, ஐ.எம்.ஏ. மதுரை பிரிவுத் தலைவர் டாக்டர் மகாலிங்கம் தலைமை வகித்தார். உலக பொது நல அமைப்பின் செயலாளர் டாக்டர் ஜெயலால் சிறப்புரை ஆற்றினார். இதில்,  இந்திய மருத்துவ சங்கம், மதுரை கிளைத் தலைவர் டாக்டர் மகாலிங்கம், செயலாளர்கள் டாக்டர் அழக வெங்கடேசன், டாக்டர் அமானுல்லா, பொருளாளர் மணி வண்ணன், மாநில கிளைத்  தலைவர் டாக்டர் செந்தமிழ் பாரி, செயலாளர்  டாக்டர் தியாகராஜன், மாநில துணைத்  தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, , டாக்டர் பழனியப்பன்,  டாக்டர் மீனா பிரியதர்ஷினி மற்றும் முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் நிர்வாகிகள்,  அலுவலர்கள் உள்பட  ஏராளமானோர்  கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad