இந்த நிறுவனத்தில், பயிலும் மாணவர்களை அழைத்துச் செல்ல பள்ளி வாகனங்கள் மட்டும் இல்லாமல், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பெற்றோர்கள் மாணவரை அழைத்து வருகின்றனர்.
இது மட்டும் அல்லாமல், கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையில் இருபுறங்களிலும் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்துவதால், மதுரையில் இருந்து சிவகங்கை செல்வதற்கு பெரிய வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.
இது தொடர்பாக, இப்பகுதியில் உள்ள போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு இப்பதி மக்கள் அடிக்கடி கவனத்திற்கு கொண்டு சென்றும், போக்குவரத்து நெரிசலை தீர்க்காமல், மதுரையிலிருந்து பூவந்தி, வரிசூர், களிமங்கலம், சிவகங்கை பகுதிகளுக்குச் செல்லும் இருசக்கர வாகனங்களை மட்டுமே தினசரி பாய்ந்து பிடித்து அபராத விதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, காவல்துறை ஆய்வாளர் போக்குவரத்து பிரிவு அவரிடம் கேட்டபோது: பல நபர்கள் உரிமம் இல்லாமல் வாகனத்தில் இயக்குவதாகவும், அதனால், அவர்களை பிடிப்பதாகவும் தனக்கென என்ற பாணியில் பதில் தெரிவித்தார். அவர் தெரிவித்த பதில், பொது மக்களை சமாதானம் சொல்லும் வகையில் ஏற்றதாக இல்லையாம்.
மேலும், மதுரை சிவகங்கை சாலையில் லாரிகள் பெரிய வாகனங்கள் ஆகியவை சாலையின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுவதால், அவ் வழியாக செல்லும், வாகனங்கள் தினறும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆயுள் தனி கவனம் செலுத்தி, சாலைகளில் இருபுறங்களில் சாலை விதிக்கு புறம்பாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி, பொது மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், போக்குவரத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் இருசக்கர வாகனங்கள் மட்டும் பாய்ந்து பிடிக்காமல், விதிகளை மீறி, ஆட்டோ களில் அதிகமாக ஆட்களை ஏற்றி செல்லும் ஆட்டோ ஓட்டுநர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப் பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில், பல இடங்களில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றுவதால், அரசு பேருந்து பயணம் செய்ய பெண்கள் தினமும் போராடும் நிலை ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து போலீசார் முன்பாகவே, ஆட்டோக்கள் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படுவதால், வயதானவர்கள் பஸ்ஸில் பயணிக்க பஸ்களுக்கு செல்ல முடியாமல், சாலையில் தடுமாறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது.
இது குறித்தும், மதுரை நகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து, மதுரை நகரில் பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்கள் நிறுத்தாமல், அரசு பேருந்து நிறுத்த ஏதுவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மதுரை நகர் பகுதி மகளிர் கோரிக்கையாகும்.

No comments:
Post a Comment