போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கிராமம்: போலீஸார் கண்டு கொள்வார்களா? - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 5 March 2023

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கிராமம்: போலீஸார் கண்டு கொள்வார்களா?


மதுரை அருகே சாலை போக்குவரத்து நெரிசலில், தினசரி கிராம மக்கள் சிக்கி தவிக்கின்றனர், மதுரை அருகே கருப்பாயூரணியில் சாலையின் இரு புறங்களிலும் ஆட்டோ மற்றும் நான்கு சக்கரவாகனங்கள், நெருங்கி வரும் சாலையோர கடைகள், வாகனங்களை முறையற்ற முறையில் நிறுத்தி வைக்கப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 


மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் அமைந்துள்ளது, கருப்பாயூரணி. இங்கு சாலையின் இரு பக்கங்களிலும் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாலும், ஆங்காங்கே சாலையோர கடைகள் மிகுந்து காணப்படுவதாலும், முறையற்ற முறையில் இருசக்கர வாகனம், கார்கள், டிரை சைக்கிள்கள் நிறுத்தப்படுவதாலும், தினசரி போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது. கருப்பாயூரணியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அவ்வழியாக ஒத்தப்ப்பட்டி ,பூவந்தி,  சிவகங்கை ராசாக்கூர் களிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளும், அவ்வழியாக செல்லும் நான்கு சக்கர வாகனங்களும் போக்குவரத்து சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.


அப்பகுதிகளில் இரு சக்கர வாகனத்தை பாய்ந்து பிடிக்கும் போலீசார், கருப்பாயூரணியில் சாலையில் போக்குவரத்து இடையூறாக  நிறுத்தப்படும் வாகனங்கள், ஆட்டோக்களை, அகற்றுவதற்கு ஏன் ஆர்வம் காட்டி வில்லையென, என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இப்பகுதியில் கடைகளுக்கு செல்வோர், சாலையின் ஓரமாகவே வாகனங்களை நிறுத்தாமல், அவர்கள் செல்லும் கடைகளுக்கு முன்பாகவே, இரு சக்கர வாகன நிறுத்தி விடுகின்றனர். இதனாலும், பள்ளிக்கு செல்வோரும், கடைகளுக்கு செல்வோம் அவதி உற்று வருகின்றனர். இதுகுறித்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தனிக் கவனம் செலுத்தி கருப்பாயூரணியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலி குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், கருப்பாயூரணி அப்பர் பள்ளி அருகே தினசரி காலை நேரங்களில், சாலையின்  நடுவே, ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி இயக்குவதால், சாலையின் நடுவே வாகனங்கள் தேங்கி நிற்கும் சூழல் ஏற்படுகிறது. மதுரை நகரில், அண்ணாநகர், கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், புதூர், மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில், போக்குவரத்து போலீஸார் முன்பாகவே, பஸ் நிறுத்தங்களில், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகள், பஸ்களுக்கு செல்லமுடியாதபடி, ஆட்டோ ஓட்டுநர்கள் இடையூறுகள் செய்வதாக பெண்கள் பலர் புலம்புகின்றனர்.


மதுரை மாவட்டத்தில், சாலை விதிகளை மதிக்காத ஆட்டோ ஓட்டுநர்களை கட்டுப்படுத்த, போலீஸாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் ஆர்வம் காட்ட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad