ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 8 March 2023

ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் வடகரை சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையின் மேலே உள்ள தண்டவாளத்தில் ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விருதுநகர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார், ரெயில்வே போலீஸ் படையை சேர்ந்த செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில் மோதி பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பலியான வாலிபர் திருமங்கலத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கதிரவன் (வயது 23) என்றும், அவர் நேற்று இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் பெற்றோர் கண்டித்ததாகவும், இதில் மனமுடைந்த அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


- திருமங்கலம் செய்தியாளர் R.வினோத்பாபு.

No comments:

Post a Comment

Post Top Ad