இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை; போலீசார் விசாரணை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 18 March 2023

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை; போலீசார் விசாரணை.


மதுரை மாவட்டம் சாப்டூரை சேர்ந்தவர் சதீஷ்(வயது36). இவரது மனைவி ஜெயமுத்து(27). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஜெயமுத்து வுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலிக்கு சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கணவரிடம் தெரிவித்துள்ளார். 

அதற்கு சதீஷ் வெளியில் சென்று விட்டு சிறிது நேரத்தில் வந்து அழைத்துச் செல்கி றேன் என கூறிவிட்டுச் சென்றார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாழ்க்கையில் வெறுப் படைந்த ஜெயமுத்து விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் பேரையூர் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad