மதுரை அருகே சென்றாயப் பெருமாள் மகா கும்பாபிஷேகம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 4 March 2023

மதுரை அருகே சென்றாயப் பெருமாள் மகா கும்பாபிஷேகம்.


திருமங்கலம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாயப் பெருமாள் மற்றும் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கண்டு குளம் கிராமத்தில்,  30 ஆண்டுகளுக்குப் பின்பு பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாய ப்பெருமாள் மற்றும் ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது, முன்னதாக , அங்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.  


முதல் கால பூஜை மற்றும் இரண்டாம் கால பூஜை, மூல மந்திர ஹோமங்கள் மற்றும் பூர்ணாஹூதி மற்றும் குடம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க,  கோவில் கோபுரத்தின் மேல் மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.


இவ்விழாவில்,  திருமங்கலம், சாத்தங்குடி , கண்டு குளம் , குதிரை சாரி குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad