
இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தினோம். அதிமுகவுக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. தோழமை கட்சிகளுக்குள் இது சகஜமான ஒன்று. 2011 காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக கூட்டணியில் இருந்தும் அக்கட்சிக்கு எதிரான செயல்களை காங்கிரஸ் செய்தது. அப்போது, கூடா நட்பு கேடாக முடிந்துள்ளது என்றார் கலைஞர். பின்னர், அவர்களுடனே கூட்டணி அமைத்தார். அது போல தான் எங்களுடைய உரசல்களும். இது சகஜம் தான்.
ஜெயலலிதா உடன் ஒப்பிடுவதற்கு இங்கு யாரும் இல்லை. இனிமேல் பாஜக அதுபோன்ற செயல்களில் ஈடுபடாது. கூட்டணியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். கூட்டணி என்பது கொள்கை சார்ந்தது அல்ல. எங்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆண்டவனால் கூட முடியாது. திருமாவளவன் எங்களுடைய சகோதரர். அவர் மீது ஜெயலலிதா அன்பும் பாசமும் கொண்டவர். எங்கள் மீது துரும்பை வீசினாலும், நாங்கள் தூணை கொண்டு எறிவோம்" எனக்கூறினார்.

No comments:
Post a Comment