திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினவிழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 8 March 2023

திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினவிழா.


மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினத்தை மாணவ மாணவியர்களுடன் ஆசிரியர்கள் ஆசிரியை கள் கொண்டாடினர்.


திருமங்கலத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவியர்களுடன் மகளிர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு ஸ்ரீஹரிகோட்டாவிற்கு புதிய ராக்கெட் செய்து கொடுத்த மாணவ மாணவியர்களை பாராட்டி வருங்காலத்தில் நீங்களும் விஞ்ஞானிகள் ஆகி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார். 

இதில் கலந்துகொண்ட ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது. மேலும் செய்தியாளர்களை சந்தித்த போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மறுபடியும் திமுகவுடன் கூட்டணி கட்சி சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அண்ணாமலை கூறியது அனைத்தும் பொய் தமிழகத்திலேயே மறுபடியும் பாஜக ஆட்சி அமைக்க என்ன வழி இருக்கிறது அதை கண்டுபிடித்து கூறுவது தான் அண்ணாமலை அவர்களின் நோக்கம் இது இங்கே தமிழகத்தில் செல்லுபடி ஆகாது என்று கூறினார். 


மேலும் சுங்கச்சாவடியை அகற்றுவது கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்த பொழுது அவர் கூறியிருந்த வெகு விரைவில் இந்த சுங்கச்சாவடி வேறு ஒரு இடத்திற்கு மாற்றி அமைக்கப்படும் திருமங்கலத்தில் இருந்து நான்கு வழிச்சாலை அமையவிருக்கிறதால் இந்த சுங்கச்சாவடி மேல கோட்டைக்கு மாற்றப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் நகர் மன்ற செயலாளர் மூ.சி.சோ. ஸ்ரீதர் மற்றும் தலைமை ஆசிரியர் கர்ணன், ஆசிரியர்கள் மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad