5 வயது சிறுமியை கணவர் கடத்தி சென்றதாக மனைவி புகார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 9 March 2023

5 வயது சிறுமியை கணவர் கடத்தி சென்றதாக மனைவி புகார்.


5 வயது சிறுமியை கணவர் கடத்தி சென்றதாக மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது36), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரபாதேவி(33). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபாதேவி, கண்ணதாசனை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக திருமங்கலத்தில் தனியாக வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு திருமங்கலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கண்ணதாசன் மனைவியிடம் இருக்கும் தனது குழந்தையை பார்க்க வந்துள்ளார். இதற்கு பிரபாதேவி மறுப்பு தெரிவித்து வந்தார். 


இவர்களது 5 வயது மகள் திருமங்கலம் பஸ்நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறாள். நேற்று மாலை கண்ணதாசன் தனது மகளை அழைத்து சென்றுவிட்டார். இதற்கிடையே பள்ளியில் இருந்து மகளை அழைத்துச்செல்ல வந்த பிரபாதேவி அவளை கணவர் அழைத்துச்சென்ற விவரம் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அவர் திருமங்கலம் டவுன் போலீ சில் புகார் செய்தார். அதில் தனது மகளை கணவர் கடத்திச்சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad