ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் செயற்குழு கூட்டம் இன்று (20~03~23) திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 20 March 2023

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் செயற்குழு கூட்டம் இன்று (20~03~23) திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் நடைபெற்றது.


ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் செயற்குழு கூட்டம் இன்று (20~03~23) திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டக்கிளையின் துணைத்தலைவர் இரா.வெங்கிடகிருஷ்ணன் முன்னிலை வகித்தார், வட்டக்கிளையின் தலைவர் ஜனாப். கே.மஹபூப்பாட்சா செயற்குழு கூட்டத்திற்கு தலைமை வகித்தார்!துணைத்தலைவர் இரா.வெங்கிடகிருஷ்ணன் செயற்குழு கூட்டத்திற்கு உவப்ப தலைகூடியுள்ள அனைரையும் இன்முகத்துடன் வரவேற்று உரையாற்றினார்!

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் மதுரை மாவட்ட மையத்தின் முன்னாள் செயலாளர் ஆத்மராவ் அவர்களின் மறைவுக்கு கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது!வட்டக்கிளையின் செயலாளர்  என்.நடராஜன், செயலாளர் அறிகையையும், பொருளாளர் ஆர். பாலகிருஷ்ணன், சங்கத்தின் வரவு~செலவு அறிக்கையையும் வாசித்து, கூட்டத்தில் கர ஒலி வாயிலாக ஒப்புதல் பெற்றனர்.


வட்டக்கிளையின் தலைவர் ஜனாப் கே.மஹபூப்பாட்சா, இயக்க பத்திரிகை "மூத்தோர் குரலை உறுப்பினர்கள் அனைவரும் வாங்கி பயனடைய வேண்டும் இயக்க நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள "மூத்தோர் குரல்" பத்திரிகை சந்தாதாரர்களாக இல்லாத உறுப்பினர்கள் இன்றே, இப்பொழுதே சந்தாதாரர்களாக ஆக வேண்டும் என இயக்க உணர்வோடு கூட்டத்தில் வலியுறுத்தி கேட்டு கொண்டார்!இயக்க உரையாற்றிய வட்டக்கிளையின் தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்!போராட்டம் இன்றியேல் வாழ்க்கை இல்லை! குழந்தை பருவத்தில் இருந்தே போராட்டம் தொடங்கி விடுகிறது.


முதன் முதலில் மாங்கொட்டையை விதைத்த நபர், இது காயாகி, கனியாகி நான் பலனை அனுபவிப்பேனா என்று வாழாவிருந்திருந்தால், நாம் இன்று மாங்கனி ருசித்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்!நமக்கு முன்பு சங்கவாதிகள் போராடி பெற்றதை நாம் அனுபவித்து வருகிறோம்!நாம் தற்போது போராடி வரும் கொள்கைக்கான பலன்களை நம் பின்னே அடி எடுத்து வரும் சந்ததியினர் பயனடைந்து நம்மை வாழ்த்துவர்!என்று உளவியல் ரீதியாக உரையாற்றி கையொலி வாயிலாக அனைத்து உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்றனர்.


செயற்குழு கூட்டத்தில்"மூத்தோர் குரல் "சந்தாதாரர்களாக சேருங்கள் என்ற அழைப்பினை ஏற்று .ஜெயந்தி ஆயுள்கால சந்தாதாராகவும்,. முருகேசன், சேதுராமன், காசிராஜன், ரகுநாதன், மதலைமுத்து, சங்கரன், பாண்டி, ராஜ்மோகன், சங்கரநாராயணன் இந்திராணி, பிரேமாராணி,தமிழ் குழலி மற்றும் சரோஜா ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் "மூத்தோர் குரல்" இயக்க மாதாந்திர பத்திரிகையின் சந்தாதாரர்களாக சேர்ந்து கூட்டத்தினரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.


கூட்டத்தில் நிலுவை அகவிலைப்படியை வழங்க அரசாங்கத்தை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் எழுபது வயது நிறைவு செய்த மூத்தோர்களுக்கு பத்து சதவீத கூடுதல் ஓய்வு ஊதிய தொகை வழங்கக்கோரி அரசாங்கத்தை கேட்டுக் கொண்டும், மருத்துவ படியை ஆயிரம் ரூபாயாக வழங்கக் கோரியும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்கக்கோரியும், எண்பது வயது நிறைவுற்றவுடன் 20% கூடுதல் ஓய்வூதியம் வழங்கக்கோரியும் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!.

தீர்மானங்களை வட்டக்கிளையின் அமைப்பு செயல் டி.வையத்துரை வாசித்தளிக்க, உறுப்பினர்களின் கை ஒலியுடன் தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன! இனைச் செயலாளர்  எம். நடராஜன் நன்றி நவிழ, செயற்குழு கூட்டத்தில் உவப்ப தலைகூடிய அனைவரும் உள்ளப்பிரிந்தனர் செயற்குழு கூட்டத்தில் எம். ஜி.முருகேசன், பி.சுப்பிரமணியன், பாண்டி, பிலாவடியான், ராஜ்மோகன், காசிராஜன், குருசாமி, சுப்புராஜ், சங்கரன், சுந்தர ராஜன், ரகுநாதன், ஹபீப் ரஹ்மான், ராஜந்திர போஸ், பெரோஷ்கான், . இந்திராணி, பிரேமாராணி, பாண்டிச் செல்வி, சரோஜா, தமிழ் குழலி, தனலட்சுமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.


கூட்ட ஏற்பாடுகளை பொருளாளர் ஆர். பாலகிருஷ்ணன், இனைச் செயலாளர் எம். நடராஜன், செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad