
விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நந்திகேஸ்வரன் மற்றும் சிவபெருமானுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசிப்பது வழக்கம். இதை அடுத்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் பிரதோஷ குழுவினர் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அமாவாசை:
வருகிற மார்ச். 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை அமாவாசையை முன்னிட்டு, இக் கோயில்களில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு, பக்தர்கள் சார்பில், சிறப்பு அபிஷேகமும், அனுமாருக்கு வடைமாலை அணிவித்து, பூஜைகள் நடைபெறும்.
சந்தனக் காப்பு:
மதுரை ஆவின், சாத்தமங்கலம் அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில், பங்குனி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

No comments:
Post a Comment