மதுரை மாவட்டம், சோழவந்தானில் புறநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் இடம் திறக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அழகர்சாமி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் மற்றும் ஆர். எம். எஸ். காலனி முன்பாக உள்ள இந்த தங்கும் இடத்தில் பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்சார வசதி, பக்தர்களின் கால் வலிக்கான மருந்து நிவாரணி, தேங்காய் எண்ணெய், சூடம், செல்போன் சார்ஜர் வசதி, ஆகியவை 24 மணி நேரமும் செய்து தரப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் சோழவந்தான் மற்றும் புறநகர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment