ஆம்னி பஸ்களுக்கு பெஸ்டிவல் டைம்லா நல்ல வருமானம், 4 ஆயிரம் டிக்கட் கொடுத்து ஊருக்குபோய்டுவந்தா ஊர்ல போய் பெஸ்டிவல் கொண்டாட என்னா இருக்கு. மற்ற நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைவாக இருக்கும் போது, பெஸ்டிவல் அதிக கட்டணம் வசூலிப்பது ஏன். எல்லாமே ஒரு வியாபாரமாக தான் நடைபெறுகிறது.
அரசும் வியாபார ரீதியாக செயல்படுகிறது, மக்களுக்கான அரசாக இல்லை, இது கண்டனத்திற்குரிய விஷயம், ஆம்னி பஸ்களில் ஏன் தரம் உயர்த்துகிறீர்கள், அரசு பஸ்களை தரம் உயர்த்தினால் அனைவரும் அரசு பேருந்துகளிலே செல்வார்களே அதை ஏன் செய்யவில்லை.
அரசு பேருந்து, அரசு மருத்துவமனைக்கு மக்கள் செல்லததற்கு காரணம் தரம் இல்லாமல் போனது தான். தொடந்து, தமிழகம் முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல். பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையை முதல்வர் கையில் வைத்துள்ளார். குண்டு வீச்சு யாரு செய்திருந்தாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று இருக்கு மக்கள் சார்பாக ஒரு வருத்தமான விஷயம் தமிழகத்தில் தான் இருக்கிறோம் என்ற சூழ்நிலை உள்ளது, ஆர் எஸ் எஸ், விசிக பேரணி இருவருமே இருவருமே சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு முன் அனைவரும் தலை வணங்க வேண்டும் கவர்மெண்ட் சட்டம் ஒழுங்கைபாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதை நாம் வரவேற்க வேண்டும், ஓசி பேருந்து பயணம் குறித்த கேள்விக்கு: ஒரு பெண்ணை அதிமுகவினர் வைத்து இது குறித்து விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது.
மக்கள் இதை உணர வேண்டும் ஓசியில் போகிறார்கள் என கூறுகிறார்கள். ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்க சில்லறை மாற்றுவதாக கூறுகிறார்கள். வெற்றி பெறுவதற்கு முன் ஒரு நிலைப்பாடு வெற்றி பெற்ற பின் ஒரு நிலைப்பாடு என்ற நிலையில் உள்ளனர். இது அதிமுக பேசி ஏற்பாடு செய்ததாக கூறுகின்றனர்.
ஓசியில் பயணம் வேண்டாம் என அந்த பெண்மணி கூறியது போல் ஒட்டுமொத்த பெண்களும் கூற வேண்டும். ஓசி பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. மக்கள் வரிப்பணத்தில் தான் அரசு பேருந்து ஓடுகிறது அமைச்சர் சொந்த பணத்திலா ஓடுகிறது.
தமிழக மக்கள் அரசு பேருந்து பயணத்தை நிராகரித்து அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என, செங்கலை வைத்து உதயநிதி அரசியல் செய்தார். நட்டா, எய்ம்ஸ் குறித்து அறிவித்து என்ன செய்தார். வெறும் அறிவிப்பாகவே உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தென்னகத்தில் பெரிய நகராக மதுரை உள்ளது. சொன்னதுபோல், விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என கேட்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
No comments:
Post a Comment