திருமங்கலம் வரதராஜப் பெருமாள் ஆலய குடமுழுக்கு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 9 October 2022

திருமங்கலம் வரதராஜப் பெருமாள் ஆலய குடமுழுக்கு.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தில்,  100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது.


முன்னதாக, யாகசாலை பூஜைகளில் பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தங்களை, வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க கோபுரத்தின் மீதுள்ள கலசத்தில் ஊற்றி சம்ப்ரோஜனம் செய்தனர், விழாவில், திருமங்கலம்,  உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கல்லணை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad