மதுரை அண்ணா நகர் தாசிலா நகர் ஆல்மக சித்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி சனிவாரத்தி ஒட்டி, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை ஒட்டி, இக்கோவில் அமைந்துள்ள சீனிவாச பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக, ஆன்மீக பக்தர் குழு சார்பில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது, அதைத் தொடர்ந்து, திருக்கல்யாண வைபவம் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதை அடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர் .
இதே போல மதுரை மேலமடை அருள்மிகு சௌபாக்கி விநாயகர் ஆலயத்திலும் லட்சுமி நாராயண பெருமாளுக்கு புரட்டாசி சனிவார் அபிஷேகம் நடைபெற்றது. இதே போன்று வர சித்தி விநாயகர் ஆலயத்திலும் லட்சுமி விநாயகர் பக்தர்களால் சிறப்பு அபிஷே நடைபெற்றது. மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே ஓடைப்பட்டி சுயம்பு ஆஞ்சநேயருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேக, வழிபாடுகள் நடைபெற்றது.
No comments:
Post a Comment