மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி நாச்சிகுளம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி ஐயப்ப நாயக்கம்பட்டி கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளது ஒவ்வொரு பள்ளிகளிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
காலை மற்றும் மாலை வேலைகளில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கி சென்றும் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது ஆகையால் தமிழ்நாடு அரசும் போக்குவரத்துக் கழகமும் கூடுதல் கவனம் செலுத்தி காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment